காவிரி உயர்மட்டக்குழு உச்சநீதிமன்றம் கூறியபடி அமைக்கப்படவில்லை - வைகோ

share on:
Classic

மதுரை விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் மோடி அரசு தடை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது அமைக்கப்பட்ட குழு உச்சநீதிமன்றம் கூறியபடி அமைக்கப்பட்ட ஒன்றல்ல.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும், மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய அரசு மறைமுகமாக கர்நாடகாவிற்கு அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.

மேகதாது அணை கட்டினால் தமிழகம் வறண்டு பாலைவனமாகிவிடும். மேகதாது அணையினால் பேராபத்து ஏற்படும். இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்.

இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளுடன் மதிமுகவும் பங்கேற்கும்” என்றார்.

Loading...

vaitheeswaran