காஷ்மீரில் பள்ளிகளுக்கு தீவைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: முஃப்தி

share on:
Classic

காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு தீ வைத்த தீவிரவாதிகள் ஒரு வாரத்துக்குள் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா முப்தி உறுதி அளித்துள்ளார்.

காஷ்மீரில் நேற்று பள்ளிகள் மற்றும் கட்டிடங்களுக்கு மர்மநபர்கள் சிலர் தீவைத்துவிட்டு தப்பினர். வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட 70 கட்டிடங்களில் 53 கட்டிடங்கள் முற்றிலும் சேதமாகிவிட்டன.

பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்திய படையினரை திசை திருப்பவே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காஷ்மீரில் நிலவிவரும் பதற்றத்தால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு தீ வைத்த தீவிரவாதிகள் ஒரு வாரத்துக்குள் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா முப்தி உறுதி அளித்துள்ளார்.

Loading...

surya