காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்

share on:
Classic

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ரிசர்வு பாதுகாப்பு படை பிரிவின் 3 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் அஹ்னூர் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள், ரிசர்வ் படையின் பொறியியல் பிரிவு முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ரிசர்வு படையின் பொறியாளர்கள் பிரிவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Loading...

jagadish