கிரிக்கெட் : கடுமையாக போராடும் இந்திய அணி

share on:
Classic

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முரளி விஜய் அரைசதம் கடந்துள்ள நிலையில், முன்னிலை பெற இந்திய அணி கடுமையாகப் போராடி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜெனிங்ஸ் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்டோக்ஸ், வோக்ஸ், ரஷீத் , பால் (Ball) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், மறுபுறம் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பட்லர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முடிவில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சுத் தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸுக்கான பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

Loading...

vaitheeswaran