கிரிக்கெட் : கால்பந்தில் இருப்பது போல ‘ரெட் கார்ட்’ அறிமுகம்?

share on:
Classic

கிரிக்கெட் போட்டியின்போது அத்துமீறலில் ஈடுபடும் வீரர்களை களத்திலிருந்து வெளியேற்றும் வகையில், 'ரெட் கார்டு' (Red card) பயன்படுத்தும் முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கால்பந்தாட்டத்தின் போது வீரர்களை எச்சரிக்கும் விதமாக 'யெல்லோ' கார்டும், இரண்டாவது எச்சரிக்கைக்காக 'ரெட்' கார்டும் நடுவர்களால் காண்பிக்கப்பட்டு வீரர்களை வெளியேற்றும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதே முறை தற்போது கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தலாம் என எம்சிசி எனப்படும் லண்டனின் மேரிலபோர்ன் கிரிக்கெட் சங்கம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விதியின்படி, போட்டிகளின்போது அத்துமீறி சண்டையிடுதல் மற்றும் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றும் வகையில் போட்டி நடுவர் மூலம் ரெட் கார்டு காண்பிக்கப்படலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதியை ஐசிசி ஏற்றுக்கொண்டால் அடுத்தாண்டு அக்டோபர் முதலாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக நடத்தலாம் என்றும் எம்சிசி பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது அண்டராம் (Under arm) பந்து வீசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத்திற்கு, நடுவர் பில்லி பௌடன் (Billy bowden) ரெட் கார்டு காண்பித்து நகைச்சுவை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran