கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை நேரில் சந்திக்கனுமா?

share on:
Classic

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 44வது பிறந்தநாளை இன்று (ஏப்ரல் 24) அவரது ரசிகர் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களிலும் அவரது பிறந்தநாள் பற்றிய செய்திகளே முழுவதும் காணப்படுகின்றன. டிவிட்டர் பக்கத்தில் #HappyBirthdaySachin போன்ற ஹாஷ்டகுகள் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அவரது  ரசிகர்கள் பலர், சச்சின் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைகள் படைத்த பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் முதன்முறையாக களமிறங்கினார். சச்சின் பல பெருமைகளையும், சாதனைகளையும்  கிரிக்கெட்டில் படைத்து  உள்ளார். சதத்தில் சதம் கண்ட முதல் வீரர், இரட்டை சதம் அடித்த முதல் வீரர், அதிக ரன்கள், அதிக போட்டிகள் என்று இவர் கிரிக்கெட்டில் பதிவு செய்யாத சாதனைகளே இல்லை என்றே கூறலாம். இன்றும் கிரிக்கெட் மைதானங்களில் இவர் பெயரை கூறினாலே ரசிகர் ஆரவார ஒலி எழுப்புபவார்கள்.

சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்திக்க பலருக்கும் ஆவலாக இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் ஆன் இந்தியா (smartonindia) என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு நாம் செய்ய வேண்டியது வேற ஒன்றுமில்லை. டிவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து #WishAndMeetSachin என்ற ஹாஷ்டகுடன் இணைத்தால் போதும், வெற்றி பெரும் 5 அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். உங்களுக்கும் சச்சினை காண ஆவலாக உள்ளதா உடனே வாழ்த்து தெரிவியுங்கள், அதை பகிருங்கள் வெற்றி பெரும் ரசிகர்கள் நீங்களாக கூட இருக்கலாம்.

 

Loading...

vijay