கிரிக்கெட் : தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி

share on:
Classic

இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அறிமுக வீரர் ஜென்னிங்ஸின் சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டிய இங்கிலாந்து அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் தடுமாறி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய குக்-ஜெனிங்ஸ் ஜோடி, இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தது. அரைசதத்தை நெருங்கிய குக் 46 ரன்களிலும், ரூட் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, அலி 50 ரன்களிலும், சதம் கடந்த அறிமுக வீரர் ஜெனிங்ஸ் 112 ரன்களிலும், பேர்ஸ்டோ 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்டோக்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

Loading...

vaitheeswaran