கிரிக்கெட் வாரியத்தில் 15 மணி நேரம் நடைபெற்ற ரகசிய சோதனை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகிரிக்கெட் வாரியத்தில் 15 மணி நேரம் நடைபெற்ற ரகசிய சோதனை

கிரிக்கெட் வாரியத்தில் 15 மணி நேரம் நடைபெற்ற ரகசிய சோதனை

கிரிக்கெட் வாரியத்தில் 15 மணி நேரம் நடைபெற்ற ரகசிய சோதனை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் வருமானவரி கணக்குகளை சமர்பித்து வருகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, வாரியத்தை நிர்வகித்து வருகிறார். அவருக்கு சந்தோஷ் ரங்கநேக்கர் உறுதுணையாக உள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வருமான வரிகணக்கு சமர்பித்ததில், வருமானவரி பிடித்தது தொடர்பாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து மும்மை வான்கடே மைதான கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரகசிய சோதனை நடத்தினர். மொத்தம் 15 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் ராகுல் ஜோரி, சந்தோஷ் ஆகிய இருவரையும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் இந்த சோதனை ரகசியமாக நடைபெற்றதால், இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.