close
முகப்புகுஜராத்தில் ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து 

குஜராத்தில் ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து 

January 10, 2018 123Views
குஜராத்தில் ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து 

குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில்  ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா அருகேயுள்ளது மஞ்சுசார் தொழிற்பேட்டை. இந்த ரசாயன ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, பற்றி எரிந்த  தீயானது  மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத்தொடங்கியதால் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. 

இதனைதொடர்ந்து,  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில், உயிர்சேத பாதிப்புகள் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.