குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு

share on:
Classic

நடிகர் அருண்விஜய் ஓட்டிச் சென்ற கார், போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று போலீஸ் வாகனத்தின் மீது மோதியதாக ‌நடிகர் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை‌ நுங்கம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர ‌விடுதியில் திருமண வரவேற்புக்கு சென்று விட்டு நடிகர் அருண் விஜய், அதிகாலை 3 மணி அளவில் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது அருண் விஜய்யின் கார் மோதியது.

காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி தப்பினார். இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனை அடுத்து அவரிடம் விசாரணை ‌நடைபெற்றது. அதில் அருண் விஜய் குடிபோதையில்‌ கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Loading...

surya