குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தின விழாவில் பிரதமர் மோடி உரை

share on:
Classic

சமூக நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் குரு கோவிந்த் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீக்கிய மதத் தலைவர் குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தின பிரகாஷோத்சவம் நிகழ்ச்சி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் பிரதமருடன் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்சியில் பேசிய பிரதமர் மோடி குரு கோவிந்த் சிங்கின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். சமூக நல்லினகத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்ந்தவர் குரு கோவிந்த் என தெரிவித்த அவர் சமூக ஒற்றுமைக்கு அவர் வழி நின்று முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றாக உழைப்போம் என்றார்.

சமுதாயத்தில் நிகழ்ந்த சமூக அவலங்களை களைய அரும்பாடு பட்டு உழைத்தவர் குரு கோவிந்த் என்று தெரிவித்த மோடி அவரது பொன்னான கருத்துகளை எதிர்கால சந்ததியினர் பின்பற்றி வாழ்ந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றார்.

ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அவரது பொன்மொழிகள் நாட்டில் அனைவரது வழக்கை நலனுக்கும் உகந்தது என்றார். குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தின பிரகாஷோத்சவம் நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Loading...

surya