கைது செய்யப்பட்ட இந்துக்கள் அனைவரும் அப்பாவிகள் - எச்.ராஜா

share on:
Classic

கோவை கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்துக்கள் அனைவரும் அப்பாவிகள் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில், கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், பயங்கரவாத செயல்பாடுகள் இருப்பதாக கூறினார். தமிழகம், தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்ற அவர், இந்து தலைவர்கள் கொல்லப்பட்ட எந்த வழக்கிலும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவங்களில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால், இந்த வழக்குகளை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த வழக்குகளை மாநில அரசு ஒப்படைக்கவில்லை எனில், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், எச். ராஜா அறிவித்தார்.

காமராஜ், கோவை.

Loading...

vaitheeswaran