கொல்காத்த அணிக்கு எதிராக பெங்களூரு அணி படுதோல்வி

share on:
Classic

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 49 ரன்களுக்கு சுருட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கு இடையே நடைபெற்ற போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 34 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 132 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில், பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்கள் மட்டுமே எடுத்து, 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறது. மறுபுறம், ஐபிஎல் வரலாற்றில் 263 ஸ்கோர் என்ற அதிகபட்ச சாதனையை தன்வசம் வைத்திருக்கும் பெங்களூரு அணி, தற்போது ஐபிஎல் வரலாற்றில் 49 என்ற மிகக்குறைந்த ஸ்கோரை எடுத்த அணி எனும் பெயரைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜாரத் மாநிலம் ராஜ்கோட்டில் அரங்கத்தில் குஜராத் மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அம்லா 65 ரன்களும், அக்சர் பட்டேல் 34 ரன்களும், மெக்ஸ்வெல் 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்து, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Loading...

vijay