கோவையில் ஏ.டி.எம் முன்பு மலர்வளையம் வைத்து நூதனப் போராட்டம்

share on:
Classic

ரூபாய் நோட்டுக்கள் குறித்த மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, கோவையில் ஏடிஎம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து போராட்டத்தில் ஈட்பட்ட காங்கிரஸ் கட்சியினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோகரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சியினர் ஒன்றுகூடினர். அங்கிருந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் ஊர்வலமாக எஸ்.பி.ஐ. வங்கியை நோக்கி செல்ல முயன்றனர்.

அப்போது போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்கு ஆளாகி இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

Loading...

surya