சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு தள்ளுபடி

share on:
Classic

அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றக்கிளை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் சசிகலா புஷ்பாவின் குடும்பத்தினர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, புதுக்கோட்டை மகளிர் போலீசிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா மற்றும அவரது குடும்பத்தினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை இன்று நீதிபதி வேலுமணி தள்ளுபடி செய்தார். அவரது கணவர், மகன் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், முன்ஜாமின் மனுவில், அவரது கையெழுத்து தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Loading...

vaitheeswaran