சதமடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை

share on:
Classic

ரியல் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் முதன்முறையாக 100 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இத்தொடரில் காலிறுதிச்சுற்றுக்கான 2வது லெக் (Leg) போட்டி, ஸ்பெயினில் உள்ள சாண்ட்டியாகோ அரங்கில் நடைபெற்றது. இதில், ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணியும், ஜெர்மனியின் பாய மியூனிச் (Bayern Munich) அணியும் களமிறங்கின. போட்டியின் முதல் பாதியில் கோல் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 76, 104, 109 ஆகிய நிமிடங்களில் ரொனால்டோ ஹாட்-ரிக் (Hat-trick) கோல்களையும், ரியல் மேட்ரிட் அணியின் மற்றொரு வீரர் மார்கோ அஸென்ஸியோ 112வது நிமிடத்தில் ஒரு கோலையும் என 4 கோல்கள் பதிவு செய்யப்பட்டன.

மறுபுறம், கடுமையாகப் போராடிய பாய மியூனிச் அணியின் லெவண்டவ்ஸ்கி, 53வது நிமிடத்தில் ஒரு கோலையும், ரியல் மேட்ரிட் வீரர் செர்ஜி ராமோஸ் 77ஆவது நிமிடத்தில் 'ஓன்-கோல்' (Own goal) ஒன்றையும் பதிவு செய்தார். முடிவில், ரியல் மேட்ரிட் அணி 4க்கு2 என்ற கோல் கணக்கில் பாய மியூனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் மூன்று கோல்கள் அடித்து அசத்திய ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 100 கோல்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில், 101 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்திலும், பார்ஸிலோனா அணி வீரர் லயோனல் மெஸ்ஸி 94 கோல்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

vijay