சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கத் தயார் - கேரள அரசு

share on:
Classic

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக சபரிமலை கோயிலுக்குள் 10 வயதிற்குட்பட்ட பெண்களும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடையில்லை என்று கூறியது.

ஆனால் அதற்கு பின்னர் வந்த காங்கிரஸ் அரசு முந்தைய அரசு தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும், சுவாமியின் புனிதத் தன்மையை காக்க பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதைய கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. பொதுவான இடத்தில் பெண்களை அனுமதிக்காமல் இருப்பது அவர்களுடைய உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3 மாத மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் நவம்பர் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Loading...

vaitheeswaran