சர்ச்சையில் சிக்கினார் பிரபல ஹாலிவுட் நடிகர் வெயின் ஜான்ஸன்

share on:
Classic

பிரபல ஹாலிவுட் நடிகரான வெயின் ஜான்ஸன் தனது சக ஆண் நடிகர்களை 'மிட்டாய் கழுதைகள்' என்று விமர்சித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'ஃபாஸ்ட் அண்டு ஃபியூரியஸ்' படத்தின் 8ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 'இத்தாலியன் ஜாப்' எனும் ஹாலிவுட் படத்தை இயக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்ற அமெரிக்க இயக்குனர் கேரி க்ரே-வின் இயக்கத்தில் இந்த ஃபாஸ்ட்-8ஆம் பாகம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஃபாஸ்ட்-8 படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் 'ராக்' என அனைவராலும் அறியப்பட்ட வெயின் ஜான்ஸன். இதையடுத்து தன்னுடன் இந்த படத்தில் நடித்த ஆண் நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் இவர்.

'இப்படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகைகளை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், ஆனால் சக ஆண் நடிகர்கள் மீது தனக்கு அந்தளவு நல்ல அபிப்ராயம் இல்லை என்றும், அவர்கள் மிட்டாய் கழுதைகள்' என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸன்.
இவரது இந்த கருத்து ஹாலிவுட் சினிமாவை கடும் பரபரப்புக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் இந்த படத்தில் ஜான்ஸனுடன் வின் டீஸல், டைரஸ் கிப்ஸன், ஜேஸன் ஸ்டேதம், க்றிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக் மற்றும் கர்ட் ரஸல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதனால், இவர்களில் யாரை குறிப்பிட்டு ஜான்ஸன் இந்த மாதிரியான கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறித்து சர்ச்சை கிளம்பத் தொடங்கியுள்ளது.

பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டில் (WWE) சாதனை நாயகனாக திகழ்ந்த ஜான்ஸன் இப்போது ஹாலிவுட்டில் சர்ச்சை நாயகனாக மாறியுள்ளார். அண்டர் டேக்கருக்கு 7 உயிர், கெயின் முகத்தில் ஆஸிட் வீச்சு மற்றும் டஜிரி துப்புவது விஷம் என்ற பரபரப்பு புரளிகளையெல்லாம் உடைத்தெறிந்துள்ளது ஜான்ஸன் கிளப்பியுள்ள இந்த புதிய பரபரப்பு.

Loading...

surya