சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் ஆஞ்சல் தாகூர் சாதனை.....மோடி வாழ்த்து | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புசர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் ஆஞ்சல் தாகூர் சாதனை.....மோடி வாழ்த்து

சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் ஆஞ்சல் தாகூர் சாதனை.....மோடி வாழ்த்து

January 10, 2018 226Views
சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் ஆஞ்சல் தாகூர் சாதனை.....மோடி வாழ்த்து

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை ஆஞ்சல் தாகூர் வெண்கலம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

துருக்கியில் சர்வதேச பனிச்சறுக்கு ஃபெடரேசன் சார்பில் அல்பின் எஜிடெர் 3200 (‘Alpine Ejder 3200’) கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் மனாலியைச் சேர்ந்த வீராங்கனை ஆஞ்சல் தாகூர் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 

சர்வதேச அளவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இந்த வெற்றி எதிர்பாராத ஒன்று என ஆஞ்சல் டுவீட் செய்துள்ளார். அவரின் வெற்றிக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.