சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 3 வது இடத்திற்கு முன்னேறினார் சிந்து

share on:
Classic

சர்வதேச பேட்மிண்டன் தர வரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனமானது வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 5வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் சிந்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் முன்னேறி 8வது இடத்தில் உள்ளார். இதேபோல், ஆடவர் தரவரிசையில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் மற்றும் சாய் பிரணீத் சிங்கப்பூர் ஓபன் தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடினர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சாய் பிரணீத் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் 8 இடங்கள் முன்னேறி, ஸ்ரீகாந்த் 21 மற்றும் சாய் பிரணீத் 22 வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் 13வது இடத்தில் உள்ளார்.

Loading...

jagadish