சவுதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் மக்களின் உயிருக்கு ஆபத்து

share on:
Classic

ஏமன் துறைமுகத்தில், சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

அரசப் படைகளுக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏமனில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஏமன் அரசுக்கு உதவியாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனொரு பகுதியாக, ஏமனின் ஹொடெய்டா துறைமுகத்தில் கூட்டுப்படையானது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஹௌதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்திற்கு நடுவே வாழ்ந்து வருவதாகவும், போரின்போது தாக்குதல்களுக்கு இடையே சிக்கி அப்பாவி பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் அரங்கேறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

ஏமனில் வாழும் மக்களில் ஒன்றே கால் கோடி பேர் பெரும் உயிர் அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து வருவதாக ஐ. நா அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya