சித்தூர் : செம்மரக்கடத்தல் தொடர்பாக 9 பேர் கைது

share on:
Classic

செம்மரக் கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசலு, செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் கர்நாடக மாநிலத்தில் கடிகனஹள்ளியில் ஆபரேஷன் ரெட் தேடுதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதன்படி கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கடிகனஹள்ளியைச் சேர்ந்த 3 பேர் செம்மரக்கட்டைகளை வாகனங்களில் கடத்தி வந்ததையடுத்து அவர்கள் பிடிபட்டதாக கூறினார்.

இதே போன்று செம்மரங்களை வெட்டும் பணியில் கூலிவேலை செய்து வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த 9 பேர் பிடிபட்டுள்ளதாகவும் சீனிவாசலு தெரிவித்தார்.

பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடிகனஹள்ளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை டன் செம்மரங்களும், 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.

Loading...

vaitheeswaran