சிலி நாட்டில் காட்டுத்தீயால் வீடுகள் சேதம்

share on:
Classic

சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோ அருகே பரவிய காட்டுத் தீயால் சுமார் 100 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

சிலியின் துறைமுக நகரமான வால்பரைசோவின் அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவிய தீ அருகில் உள்ள குடியிருப்புக்கு பரவியது.

தீ பிடித்தது பற்றி கேள்விப்ப்டட தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை வெளியேற்றிவிட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 400 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 100 மர வீடுகள் தீயில் கருகி சேதமடைந்தன. காட்டுத் தீ காரணமாக வால்பரைசோ நகரில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

Loading...

jagadish