சீனா மற்றும் லண்டன் இடையே நேரடி சரக்கு ரயில்

share on:
Classic

சீனாவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சீனா மற்றும் லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

சீனாவின் கிழக்கில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், துணிகள், பைகள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்றது. இரண்டு வாரங்களில் அது லண்டன் சென்றடையும்.

தண்டவாளத்தின் பாதை மாறும் போது சரக்குகள் வேறு ரயில்களுக்கு மாற்றப்பட வேண்டும். தனது எல்லைகளுடன் ஐரோப்பாவை இணைக்கும் பட்டுப் பாதை திட்டத்தின் பங்காக ஐரோப்பிய நகரங்களுக்கான நேரடி ரயில் பாதைகளை சீனா விரிவுப்படுத்தி கொண்டு வருகிறது.

இந்த சேவை, ஏற்றுமதியாளர்களுக்கு மெதுவான மற்றும் விலைக்குறைந்த சரக்கு கப்பல் சேவைக்கும் மற்றும் அதிவிரைவான விமான போக்குவரத்துக்கும் இடையில் ஒரு நடுத்தர வாய்ப்பாக அமைகிறது.

Loading...

surya