சுங்கச்சாவடியில் நவம்பர் 14 நள்ளிரவு வரை கட்டணம் கிடையாது

share on:
Classic

பண பரிவர்த்தனைகள் இயல்புநிலையை எட்டாததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, மேலும் 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, கடந்த 8ஆம் தேதி இரவு, பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக, வங்கி வாசல்களில், பொது மக்கள் வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர்.

பெரும்பாலான ஏ.டி.எம்.-களில் புதிய நோட்டுகள் கிடைக்கவில்லை என்பதால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் வசூலிப்பதில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே, பல இடங்களில் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 11ஆம் தேதி நள்ளிரவு வரை, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், மீண்டும் சில்லரைப் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளதால், வருகிற 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை, சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

Loading...

vaitheeswaran