சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: வெற்றியுடன் தொடங்கினார் சிந்து

share on:
Classic

பேட்மின்டன் விளையாட்டில் உலகக்கோப்பையாகக் கருதப்படும், சூப்பர் சீரிஸ் ஃபைனல் பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் பிவி சிந்து வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

உலக பேட்மின்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கான இந்த தொடர் துபாயில் நேற்று துவங்கியது. இதில் நடைபெற்ற பி (B) குரூப்பிற்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, இரண்டு முறை ஜூனியர் உலக சாம்பியனும் 19 வயது இளம் வீராங்கனையுமான ஜப்பானின் அக்கேன் யமகுச்சியை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டை, சிந்து 12-21 என இழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன்பின், சுதாரித்துக்கொண்டு விளையாடிய சிந்து, இரண்டாவது செட்டை 21-8 எனவும், மூன்றாவது செட்டை 21-15 என தொடர்ச்சியாக இரண்டு செட்களை கைப்பற்றி அசத்தினார்.

முடிவில் , 2-1 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்திய சிந்து, பி குரூப்பிற்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார்.

Loading...

jagadish