சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையை படமாக்கும் மகள்கள்

share on:
Classic

ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சௌந்தர்யா அஸ்வின் இருவரும் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தெரிவித்துள்ள சௌந்தர்யா, ஐஸ்வர்யா தனுஷ் ரஜினிகாந்தின் வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருவதாகவும் அதை ரஜினியிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றபின்னர் படப்பிடிப்புக்கான நடவடிக்கைகள் மேறகொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

"அப்பாவின் வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை இந்தப் படம் வெளிக் கொண்டு வரும்” என்று கூறியுள்ள அவர், “ஒரு சாதாரண மனிதன் கடின உழைப்பும், திறமையும் இருந்தால் எப்படி முன்னேறலாம் என்பதை ரஜினி ரசிகர்களுக்கு உணர்த்தும் படமாக இது இருக்கும்” என்றும் சௌந்தர்யா பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

சௌந்தர்யாவின் இந்த அறிவிப்பையடுத்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Loading...

vaitheeswaran