close
முகப்பு சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்" இன்று தீர்ப்பு

சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்" இன்று தீர்ப்பு

January 10, 2018 170Views
 சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்" இன்று தீர்ப்பு

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங்கை வெளியிடத் தடை கோரித் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையன்று நடிகர் சூர்யா நடித்த "தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கை வெளியிடத் தடை விதிக்கக் கோரி ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார். 

இதை எதிர்த்து, ஸ்டார் மூவிஸ் நிறுவனம்மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் நாளைத் தீர்ப்பு வழங்குவதாகக் கூறி ஒத்தி வைத்தனர். அதன் படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது