சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புசூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்

December 02, 2017 260Views
சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, வடகரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் சூறைக்காற்று  வீசி வந்தது. 

இதனால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் சேதமடைந்துள்ளன.  மேலும் இங்கு பெய்துவரும் தொடர்மழை காரணமாக, நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக குலை தள்ளிய நிலையில் உள்ள வாழை மரங்கள்,  காற்றின் காரணமாக வேருடன் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு உருவாகியுள்ளதாக தெரிகிறது.