சென்னை சாலையில் ஆறாக ஓடிய எண்ணெய் : வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்ததில் பலர் காயம்

Classic

சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய எண்ணெய் படலத்தால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சாலையில் எண்ணெய் படலம் பரவலாக உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை சைதாபேட்டையில் இருந்து கிண்டி நோக்கி லாரி சென்று கொண்டிருந்த லாரி  பேசின் பிரிட்ஜ் பாலம் வந்த போது திடீரென லாரியில் இருந்து எண்ணெய் சாலையில் கொட்டியதில் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது.

இதனால் பின்னால் வந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்க முடியாமல் வாகனத்துடன் சறுக்கினர். இதில் இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் வழுக்கி விழுந்ததில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் இந்த எண்ணெய் படலம் புரசைவாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், கிண்டி, செல்லும் சாலைகளிலும்  பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்லுமாறு மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading...

sankaravadivu