சென்னை டெஸ்டை கான சச்சின், தோனியின் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

share on:
Classic

சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதீர் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்.

மேலும் அவர் தனது உடலில் இந்திய தேசிய கொடியையும் சச்சினின் எண் ‘10’ என்பதையும் வர்ணம் பூசியபடி போட்டியைப் பார்த்து வருகிறார். இதற்கிடையே சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு இன்று போட்டியை காண அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அவர்கள் ‘சேப்பாக்கம் மைதானத்திற்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் உடலில் வர்ணம் பூசியிருந்த காரணத்தால் அனுமதி வழங்கமுடியாது’ என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களிடம் போட்டிக்கான டிக்கெட்டுகள் இருந்தும் காண முடியாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Loading...

jagadish