சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Classic

கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக்கோரியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், தமிழர் வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்          

                   

Loading...

sankaravadivu