'சென்னை2சிங்கப்பூர்' சாலை வழியே இசை வெளியீட்டுப் பயணம்..!

share on:
Classic

சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளார் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிடும் பயணம் சென்னையில் இன்று தொடங்கியது. நடிகர் சூர்யா கொடியசைத்து தொடங்கிவைத்த இந்த பயணத்தில் இந்தப் படத்தின் முதல் பாடலான 'வாடி வாடி' பாடலை சத்யம் திரையரங்கில் வெளியிட்டனர்.

இன்று தொடங்கும் இந்தப் பயணத்தில் படத்தின் 2ம் பாடலை பூடானிலும், 3ம் பாடலை மியான்மரிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே போன்று படத்தின் 4ம் பாடலை தாய்லாந்திலும், 5ம் பாடலை மலேசியாவிலும், கடைசிப் பாடலான 6ம் பாடலை சிங்கப்பூரிலும் சென்றடைந்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆபத்தான இந்த சாலை வழிப்பயணத்தில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அதோடு நிறுத்திவைக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியுள்ளார். எத்தனை நாட்களில் பயணம் முடியும், எப்போது அடுத்தடுத்தப் பாடல்கள் வெளியிடப்படும் என்பது குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றாலும் இந்தச் சாதனையில் நிச்சயம் வெற்றிபெறும் மனஉறுதியோடு பயணத்தைத் தொடங்கியுள்ளார் ஜிப்ரான்.

Loading...

cauvery