செம்மரக்கடத்தல் விவகாரம் : சென்னை பொறியாளர் உட்பட 6 பேர் கைது

share on:
Classic

சர்வதேச செம்மரக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த சென்னை பொறியாளர் சுப்ராம் உட்பட 6 பேரை கடப்பா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிண்டகாம் மதினி மண்டலம் கம்பாலி சோதனைசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்த வழியாக வந்த காரில் பயணம் செய்த நபர்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அவர்கள் சர்வதேச செம்மரக்கடத்தல் கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த சுப்ராம் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த மூன்றரை டன் எடையுள்ள சுமார் 5 கோடி மதிப்பிலான செம்மரம், ஒரு லாரி, இரண்டு கார், மூன்றரை லட்சம் ரொக்கம் , 100 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Loading...

vaitheeswaran