சேனல் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை

share on:
Classic

தொலைக்காட்சி சேனல் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார தொகுப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வெங்கையா நாயுடு, கறுப்புப் பண அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் பிரதமர் மோடி வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளதாகவும், இது நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு அமல்படுத்தப்படுவதற்காக காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மட்டும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புவது நல்லதல்ல என்றும், இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Loading...

surya