சேப்பாக்கத்தில் இன்று கடைசி டெஸ்ட்

share on:
Classic

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடையச்செய்து 3-0 என்ற கணக்கில் தொடரைக்கைப்பற்றியது இந்தியா.

இந்நிலையில் இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து அணியும், வரலாற்று சாதனையை பதிவு செய்ய இந்திய அணியும் கடுமையாக போராடும் என்பாதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த கேப்டன் கோலியும், சொந்த ஊரில் விளையாடும் அஸ்வினும் இந்தப் போட்டியில் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Loading...

jagadish