சேலத்தில் பழங்கால பொருட்களின் கண்காட்சி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புசேலத்தில் பழங்கால பொருட்களின் கண்காட்சி

சேலத்தில் பழங்கால பொருட்களின் கண்காட்சி

December 02, 2017 419Views
சேலத்தில் பழங்கால பொருட்களின் கண்காட்சி

தமிழர்களின் பழங்கால வாழ்வியல் முறையை உணர்த்தும் வகையில் சேலத்தில் பழமையான பொருட்களின் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

சேலம் மாநகர் பகுதியில் தனியார் அமைப்பின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் பழங்கால பொருட்களின் கண்காட்சி துவங்கியது. 

தேசிய அளவிலான பழமை வாய்ந்த நாணயங்கள், தமிழகத்தில் ஆட்சி புரிந்த விஜய நகர பேரரசு சோழர்கள், பாண்டியர்கள் கால நாணயங்கள் மற்றும் மரப்பாச்சி பொம்மைகள், ஓலை சுவடிகள், தபால் தலைகள் மற்றும் பழங்கால கலைப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. 

பழங்கால பொக்கிஷங்களை சேகரிக்கவும் ஆர்வம் கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கண்காட்சியை நேரில் வந்து பார்வையிட்டனர். இதன்மூலம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொல்லியல் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என கண்காட்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.