close
முகப்புசேலம், மதுரை, கோவையில் விரைவில் பஸ்போர்ட் மையங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

சேலம், மதுரை, கோவையில் விரைவில் பஸ்போர்ட் மையங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

January 13, 2018 147Views
சேலம், மதுரை, கோவையில் விரைவில் பஸ்போர்ட் மையங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

சேலம், மதுரை, கோவையில் பஸ்போர்ட் மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம், பெங்களூரு சாலையில் புதிய மேம்பால திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 21 கோடியை 97 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதே போன்று சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள 103 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 

இதில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, கோவையில் விரைவில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றும் சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.