close
முகப்புஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: கமல்

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: கமல்

January 14, 2018 144Views
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: கமல்

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக  நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், இதனைத் தெரிவித்தார். மேலும் சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.  புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும், கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்வேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.