ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது

share on:
Classic

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழகத்தில் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால், இடைக்கால அனுமதி கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் மத்திய அல்லது மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இந்தாண்டு ஜல்லிக்கட்டுக்கு சாத்தியம் என தெரிகிறது.

இதனால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறி ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி மனுவையும் நிராகரித்தது உச்சநீதி மன்றம்.

நீதிமன்ற உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே அனவைரது எதிர்பார்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது எழுந்துள்ளது.

Loading...

jagadish