ஜல்லிக்கட்டு வழக்கு : நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்

share on:
Classic

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என விலங்குநல அமைப்புகள் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜனவரி 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பிறகு மற்ற மனுக்கள் விசாரிக்கப்படும் என்று கூறி, வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Loading...

vaitheeswaran