ஜல்லிக்கட்டு விவகாரம்: டிவிட்டர் பக்கத்தை முடக்கிய த்ரிஷா

share on:
Classic

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வரும் நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் பீட்டா அமைப்பிற்கு நடிகை த்ரிஷா ஆதரவு தெரிவித்து வருவதன் காரணமாக சமூக வலைதளங்களில் பலரின் கடுமையான எதிர்ப்புகளையும், விவாதங்களையும் சந்தித்து வருகிறார்,

இந்நிலையில் த்ரிஷாவிற்கு எதிராக போஸ்டர்களும் வெளியிடப்பட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் "பீட்டா அமைப்பில் இருந்தாலும் நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை. இதற்காக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக நடத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா?

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் தமிழ்ப் பண்பாடு பற்றி பேசவும் வெட்கப்பட வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தையும் முடக்கியுள்ளார்.

Loading...

surya