ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிசிசிஐ

share on:
Classic

ஜெயலலிதாவின் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிசிசிஐ சார்பில் ஆந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்பாராத சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.

திண்டுக்கல்லில் நாளை நடைபெறவிருந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும், சென்னை நகரின் நிலைமை மற்றும் மக்களின் மனநிலையைப் பொறுத்தே போட்டி குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Loading...

surya