டச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆனந்த் பவார் சாம்பியன்

share on:
Classic

நெதர்லாந்தில் நடைபெற்ற டச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த் பவார் சாம்பியன் பட்டம் வென்றார். 

டச் ஓபன் பேட்மிண்டன் போட்டி நெதர்லாந்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஆனந்த் பவார், ஃபின்லாந்து வீரர் கலெல் கொல்ஜோனை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 20க்கு22 என ஆனந்த் தவறவிட்டார். 

இருப்பினும், அடுத்தடுத்த செட்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆனந்த் பவார்,  21க்கு19, 21க்கு17 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். டச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

 

Loading...

jagadish