டி.டி.வி.தினகரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: டிராபிக் ராமசாமி

Classic

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் மனுவினை நிரகாரிக்க வேண்டுமென்று டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளார். இந்த மனுவினை மாலை அவசர மனுவாக எடுத்து கொள்வதாக தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.

டி.டி.வி. தினகரன் தற்போது அதிமுக அம்மா என்ற அணியில் சுயேட்சை வேட்பாளர் அடிப்படையில் தான் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டியிடுகின்றார். சுயேட்சை வேட்பாளர் வேட்புமனுவில் 10 பேர் முன்மொழிந்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் டி.டி.வி. தினகரன் வேட்புமனுவில் ஒருவர் மட்டுமே முன்மொழிந்து உள்ளார்.

எனவே அங்கீகரிக்கப்படாத கட்சியை சேர்ந்த டி.டி.வி. தினகரன் வேட்புமனுவில் ஒருவர் மட்டும் முன்மொழிந்துள்ளதால் அவரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என முறையீடப்பட்டது. அப்போது இந்த வழக்கை இன்று இறுதி வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதே போல் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ராமரவிகுமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர் காமேஷ் ஆகியோரின் வேட்புமனுவை நிராகரித்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளையும், பிற்பகல் விசாரணைக்கு எடுத்து கொள்ளுவதாக தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

vijay