டிரம்பின் உத்தரவுக்கு தற்காலிகத் தடை

share on:
Classic

ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவிற்கு நியூயார்க் நீதிபதி தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சனிக்கிழமை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயரும் அகதிகள் மற்றும் தீவிரவாதிகளை தடுக்கும் விதமாக ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த 24 மணிநேரத்தில் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 109 பயணிகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிபர் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் பல்வேறு அமெரிக்க அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நியூயார்க் மாவட்ட நீதிபதி ஆன் டோன்லி, ட்ரம்பின் உத்தரவிற்கு தற்காலிகமாக தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Loading...

jagadish