டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர்?

share on:
Classic

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளதாக கருதப்படுகிறது. 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவுக்கு வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிநாட்டினர் உடனடியாக கூட அமெரிக்காவுக்கு செல்ல முடியாத இறுக்கமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சி மட்டுமல்ல, சொந்த கட்சியான குடியரசு கட்சி தலைவர்களே டிரம்புக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள்.

இவருடைய முடிவால் நாட்டுக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கும் நிலையை டிரம்ப் உருவாக்கி இருப்பதாக குடியரசுக் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒருவேளை 3ஆம் உலகப் போர் மூளும் நிலையை உருவாக்கி விடுமோ? என அஞ்சுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அமெரிக்காவுக்கு பக்க பலமாக இருந்த நாடுகள் கூட டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், பக்கத்து நாடான கனடா, மெக்சிகோ ஆகியவை டிரம்பின் நடவடிக்கையை கண்டித்துள்ளதையும் குடியரசுக் கட்சித்தலைவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்

Loading...

jagadish