டெல்லி காற்று மாசு: பொதுநலன் வழக்கு இன்று விசாரணை

share on:
Classic

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலை மாசை கட்டுப்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பொதுமக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

விசாரணையின் போது மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading...

surya