தங்கமகன் மாரியப்பனுக்கு தமிழக விளையாட்டு சங்கம் பாராட்டு

share on:
Classic

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக தனியார் ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாரியப்பன், தமிழக விளையாட்டு சங்கம் என்னை கவுரவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய வீரர்கள் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதிக்க வேண்டும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதினை பார்வையாளர்களுக்கு காண்பித்து மகிழ்ந்தார்.

Loading...

vijay