தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் எம். ரங்கசாமி வெற்றி

share on:
Classic

தஞ்சை தொகுதியில், அதிமுக வேட்பாளர் எம். ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் எம். ரங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் சுற்றுதொடங்கி அதிமுக வேட்பாளர் ரங்கசாமி முன்னணியில் இருந்தார்.

இறுதியில் 18வது சுற்றின்போது, ரங்கசாமியின் வெற்றி உறுதியானது. கடைசி சுற்றில் அவர், 1 லட்சத்து, 1,646 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 74, 403 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இன்னும் ஒரு சுற்று மீதமுள்ள நிலையில், 27, 247 வாக்குகள் அதிகம் பெற்று, ரங்கசாமி தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபிறகு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வதாகக் கூறினார். இந்த வெற்றி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Loading...

surya